வேட்புமனுத் தாக்க லின்போதே பரபரப்பாகப் பேசப்பட்ட தொகுதியாகி விட்டது வடசென்னை. தி.மு.க. வைப் பொறுத்தவரை, ஏதேனும் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தால், அத்தொகுதியின் மா.செ. உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படு மென்று தலைமை அறிவித்த தால், கருத்து வேறுபாடுகளைக் களைந்து கழக உடன்பிறப்பு களோடு நிர்வாகிகள் கை கோர்த்து நிற்கிறார்கள். அ.தி.மு.க. தலைமை அதுபோல் கடுமை காட்டாததால், அனைத்துத் தொகுதியிலும் நிர்வாகிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் உரசல்கள் குறித்து தலைமைக்கு புகார் மேல் புகார் வந்தவண்ணமாக உள்ளதாம்.
வடசென்னையைப் பொறுத்த வரை, மா.செ.க்கள் மத்தியில் பல பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து, வேட்பு மனு தாக்கலின்போதே ஒற்றுமையாகச் செயல்பட்டதால் ராயபுரம் மனோ மட்டும் எடப் பாடியின் குட்புக்கில் இடம்பிடித் துள்ளாராம். இத்தனைக்கும், மனோவுக்கு கட்சி நிதி எதுவும் இல்லை என்று தலைமையில் சொல்லியும், சரியென்று தலை யாட்டியவர், அதேபோல் தன்னை தன்னிச்சையாகச் செயல் பட விட வேண்டுமென்று எடப் பாடியிடம் கேட்டுக்கொண்டா ராம். வேட்பாளர் பெயர் அறி விப்புக்கு முன்பாகவே நிர்வாகி களுக்கு 5 கோடிக்கு மேல் செல வழித்துள்ளாராம். வேட்பாளர் பெயர் அறிவித்தபிறகு வட்ட செயலாளர்களுக்கு தலா 50 ஆயிரமும், மா.செ.க்களுக்கு 10 லட்சமும், முக்கிய பெண் நிர் வாகிகளுக்கு 5000 ரூபாய் வீதம் பட்டுப் புடவைகள் என வாரி வழங்கியுள்ளாராம். இப்படி பணத்தால் குளிப்பாட்டியே நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுத்து, பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளாராம். மேலும், வாக் காளர்களுக்கு செலவழிப்பதற்காக வும் ஒவ்வொருவருக்கும் தலா 1000 ரூபாய் என்ற கணக்கில் வட்டச் செயலாளர்களின் வசம் பணத்தை கைமாற்றியுள்ளதால், கூட்டணி பலமில்லாதபோதும் பணத்தாலே யே வெற்றியைப் பெற்றுவிட லாமென்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
அதேவேளை, மனோவின் வியூகத்துக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு தனது அரசியல் வியூகத்தை பலப்படுத்தி வரு கிறாராம். வேட்புமனுத் தாக்கலின் போதே ஒருமையில் சண்டை யிட்டு தனது ஈகோவை சீண்டி விட்டதால், தி.மு.க.வில் வேட் பாளராக கலாநிதி வீராசாமி நிறுத்தப்பட்டாலும், தான்தான் வேட்பாளர் என்ற உணர்வோடு பிரச்சாரத் தில் தீவிர கவனம் செலுத்திவருகிறாராம். நள்ளிரவிலும்கூட நிர் வாகிகளோடு ஆலோ சனையில் ஈடுபட்டு, தி.மு.க.வுக்கான வாக்கு கள் எவையெவை, மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் வாக்குகள் எவையெவை எனப் பகுத்து, தி.மு.க. வாக்கு களைத் தக்கவைப்ப தோடு, மாற்றுக்கட்சி வாக்குகளை வளைப்பது குறித்தும் பிரச்சார வியூ கம் வகுத்துச் செயல்படு கிறாராம். வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்வதோடு, வீடு வீடாகச் சென்று சந்தித்து வாக்குகளைக் கவர, திண்ணைப் பிரச் சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளாராம். மேலும், இத்தொகுதிக்கு கட்சி யின் முக்கிய பிரமுகர் களை வரவைத்து பிர மாண்ட பிரச்சாரக் கூட் டத்தை நடத்துவதிலும் தீவிரம் காட்டுகிறாராம். அமைச்சர் சேகர்பாபு காட்டும் வேகத்தைப் பார்த்து, வேட்பாளர் கலாநிதி வீராச்சாமியும் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
வடசென்னையில் தி.மு.க. யள் அ.தி.மு.க. என்றே மோதல் இருந்துவரும் சூழலில், பா.ஜ.க. மாநில தலைவரோ, மாதவரத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூரிலுள்ள சொகுசு விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பால்கனகராஜுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு கிளம்ப, அவரது பிரச்சார வாகனம் ஏதோ கோளாறால் பாதியிலேயே நின்றுவிட்டது. "பிரச்சார வாக னம் அனைத்தும் எஸ்.ஆர்.எம். வேந்தர் கொடுத்ததுதான். எல்லாமே பழைய வண்டியை பெயிண்ட் அடித்துக் கொடுத்துள்ளார்'' என நிர்வாகிகள் கூற, பா.ஜ.க. மா.செ. கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்த குட்டியானையின் மூலம் பிரச்சாரம் தொடர்ந்தது.
அந்த பிரச்சாரத்தில், பால்கனகராஜை வெற்றிபெறச் செய்தால் மத்திய அமைச்ச ராவார் என்று பா.ஜ.க. மா.த. பிரச்சாரம் செய்தார். தமிழிசைக் கும் இவருக்குமான பழைய பகை காரணமாகவே பால்கனகராஜ் மத்திய அமைச்சராவார் என்று தூக்கிவைத்துப் பேசியதாகக் காதைக் கடித்தனர் பா.ஜ.க. நிர்வாகிகள்!